Tags

Govind, Govindarajan,blog, govindarajan78, Chennai, govind blogs, weblogs govind, govind's blogs.

Whats this: recently learnt about search engine listing. hmmm lets see what happens in few months.

Tuesday, July 29, 2008

பாணன் - பாணினி - சங்ககாலம்

இம்பர் வான் எல்லை இராமனையே பாடி
என் கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி
வம்பதாம் களபமென்றேன்
பூசுமென்றாள்
மாதங்கமென்றேன்யாம் வாழ்ந்தோமென்றாள்
பம்பு சீர் வேழமென்றேன்
தின்னுமென்றாள்
கம்பமா என்றேன் நற்களியாமென்றாள்
பகடு என்றேன்
உழும் என்றாள்
கைமா என்றேன்
சும்மா கலங்கினாளே பாணீ

அரசனைப் பாடிவிட்டு வந்த புலவரைப் பார்த்து,
'என்ன பரிசு பெற்று வந்தாய்?' என அவர் மனவி கேட்கிறாள்.

புலவர் 'களபம்' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார். அது கேட்ட அவர் மனைவி, சந்தனம் என புரிந்து, சாப்பாட்டுக்கே வழியில்லை சந்தனமா என மனதில் நினைந்தவளாக, சரி பூசிக்கொள்ளுங்கள் என்கிறாள்

புலவரோ, என்ன இவள்? தவறாக புரிந்து கொண்டு விட்டாளே என நினைத்துக் கொண்டு, 'மாதங்கம்' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்.

அவர் மனைவியோ, 'மா தங்கம்' அதாவது அதிகமான பொன் எனப் புரிந்து கொண்டு, அதைக் கொண்டு நாம் நல வாழ்வு வாழலாம் என்கிறார்.

இப்போதும் தவறாகத்தான் புரிந்திருக்கிறாள் என உணர்ந்த புலவர், 'வேழம்' கொண்டு வந்திருக்கிறேன் என்றாராம்.அவர் மனைவியோ, கரும்பு என புரிந்து கொண்டு, சரி சாப்பிடுங்கள் என்கிறார்.

புலவர், இப்போதும் தவறாகத்தான் புரிந்திருக்கிறாள் என அறிந்து, 'கம்பமா' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்.
மனைவி 'கம்பமா' என்பதை கம்பு மாவு எனப் புரிந்து கொண்டு, நல்ல களி செய்து சாப்பிடலாம் என்கிறாள்.

இதற்கு மேலும் சரி வராது என அறிந்த புலவர், 'கைமா' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்அப்போதுதான் நீண்ட தும்பிக்கையை உடைய யானை என அறிந்த அவர் மனைவி, நம் இரண்டு வயிறுக்கே உணவில்லாத வறிய நிலையில், உடம்பெங்கும் வயிறாய் உள்ள யானைக்கு தீனிக்கு என்ன செய்வது என்று கலங்கினாளாம்.

யானை என்பதை எத்தனை வகையாக தமிழில் சொல்லலாம் என்று பாருங்கள். பாணர்கள் எக்காலத்திலும் பொருளுள்ளவராய் வாழ்ந்ததில்லையாம். கிடைக்கும் பெரும் பரிசில்களை எல்லோருக்கும் ஈந்து விட்டு அடுத்த வேளை உணவுக்கு எதிரபார்ப்பவராய் இருப்பர் என்ற குறிப்பையும் முதலிரு வரிகளுக்கிடையே தருவது தெரிகிறதல்லவா?

- விளக்கம் சுல்தானின் வலைப்பதிவிலிருந்து சுட்டது

2 comments:

anjsanj said...

இம்பர் வான் எல்லை இராமனையே பாடி
என் கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி
வம்பதாம் களபம் என்றேன்; பூசும் என்றாள்
மாதங்கள் என்றேன் யாம் வாழ்ந்தோம் என்றாள்
பம்பு சீர் வேழம் என்றேன்; தின்னும் என்றாள்
நற் பகடு என்றேன் ; உழும் என்றாள்
கம்பமா என்றேன்; நற் களியாம் என்றாள்
நான் கைமா என்றேன்; சும்மா கலங்கினாளே!

anjsanj said...

இம்பர் வான் எல்லை இராமனையே பாடி
என் கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி
வம்பதாம் களபம் என்றேன்; பூசும் என்றாள்
மாதங்கள் என்றேன் யாம் வாழ்ந்தோம் என்றாள்
பம்பு சீர் வேழம் என்றேன்; தின்னும் என்றாள்
நற் பகடு என்றேன் ; உழும் என்றாள்
கம்பமா என்றேன்; நற் களியாம் என்றாள்
நான் கைமா என்றேன்; சும்மா கலங்கினாளே!