யதார்த்தவாதி பகுஜன விரோதி
கேளதெ ஹேளித்த யோசனெகு, மேல பித்த சூளெகு காசில்லா. ( கன்னடம் )
தமிழில்,
கேக்காமெ சொன்ன யோசனைக்கும், மெலே விழும் வேசிக்கும் காசு கிட்டாது.
டோபிகா குத்தா, நா கர்கா, நா காட்கா (ஹிந்தி)
தமிழில்,
சலவைக்காரரின் நாய் அவர் வீட்டையோ, அல்லது, அவர் வேலை செய்யும் நீர்ப்படித்துறையோ (இங்கு, காட் என்பது, நதிப்படித்துறையைக்குறிக்கிறது), தன் தங்கும் இல்லம் என்று சொல்லமுடியாது. அதாவது, இந்நாய்க்கு என்று ஒரு இடம் இல்லை என்று அர்த்தம் ஆகிறது. இங்கு ஒன்று குறிப்பிடாக வேண்டும். சலவைக்காரரின் வீடில் காலியிடம் என்பது அபூர்வம். எங்கும், துணி மூடைகளாக நிறைந்திருக்கும், சலவைக்காரரோ, நாளின் பெரும்பகுதியை, படித்துறையில்தான் களிப்பார். அவர் நாய் அவரிடம் இருக்கும். ஆனால், அதைப்பற்றி அவர் நினப்பது கிடையாது. அது அங்கு உலாத்திக்கொண்டு அலையும்.
அம்மியே காத்துல பறக்கும்போது இலவம்பஞ்சு எங்கே
வேண்டாத பொண்டாட்டி கால்பட்டால் குத்தம் கைபட்டால் குத்தம்
தன்னை பெற்ற தாய் கிண்ணி பிச்சை எடுக்க மகன் கும்பகோணம் போய் கோதானம் செய்தானாம்.
எங்கு அடிபட்டாலும் நாய் காலையே நொண்டுமாம்
தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும்
வெல்லம் தின்னவன் ஒருத்தன் வெரல் சூப்பறது இன்னொருத்தனா?
பட்ட காலிலேயே படும்
ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி
சேரிடம் அறிந்து சேர்.
கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு.
எதிர் காற்றில் எச்சி உமிழாதே
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது
நெருப்பில்லாமல் புகையாது
ஆடுற மாட்ட ஆடித்தான் கறக்கணும்
மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்
அழுகிற பிள்ளை தான் பால் குடிக்கும்
உப்பு தின்னவன் தண்ணி குடிச்சுத்தான் ஆகணும்
உள்ளூர் சுடுகாட்டிற்கும் அசலூர் ஆற்றிற்கும் தான் பயப்படனும். (அசலூர் சுடுகாட்டிற்கு பயமில்லாமல் செல்லலாம். ஏனெனில் மறைந்தவர்கள் நமக்கு அறிமுக வில்லாதவர்கள்..அதுபோல உள்ளூர் ஆற்றின் ஆழம் பற்றி நமக்கெல்லாம் தெரியும்)
மகள் வாழ்கிற வாழ்க்கைக்கு மாசம் பத்து கட்டு விளக்குமாறாம்.
வழுக்கி விழுந்தவனுக்கு அரிவாள்மனை கூரை முட்டு கொடுத்த மாதிரி
பிச்சைக்கு வந்த பிராமணா பெருங்காய சொப்பை கண்டியோ?
கழுதைக்கு வாக்கப்பட்டு கத்தாமல் இருக்க முடியுமா?
இடிச்சவன் பொடைச்சவன் இருக்க எட்டி பாத்தவன் கொட்டிகிட்டு போனானாம்.
ரெண்டு வீட்டு விருந்தாடி கெண்டையேறி செத்தானாம்.
ஈ கடிச்ச புண்ணுக்கு எழவு கொண்டாடினானாம்.
புருஷன் அடிச்சது பெரிசு இல்ல; சக்களத்தி சிரிச்சது பெரிசு.
கொள்ளி வெக்கிர ராஜாவுக்கு கொளுத்தி கொடுக்கிற மந்திரியாம்
அரைப்பணம் கொடுத்து அழச்சொன்னானாம் ஒரு பணம் கொடுத்து ஓய சொன்னானாம்.
தான் வீட்டு கதவ புடுங்கி அடுத்தவன் வீட்டுக்கு வச்சுட்டு விடிய விடிய நாகாத்தானாம்.
தலைக்கு மேல் வெள்ளம் போகும்போது சாண் போனாலென்ன முழம் போனாலென்ன
வைக்கோல் போரில் நாய் படுத்தாற் போல்
ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
அடி உதவுர மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்
யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்
விதி கால் மதி முக்கால்
விதியை மதியால் வெல்லலாம்
No comments:
Post a Comment