கூரையேறி கோழிபிடிக்கத்தெறியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவனாம்
மந்திரத்தினால் மாங்காய் விழாது
மூத்தோர் வார்த்தையும் முது நெல்லிக்கனியும் முன்னே கசக்கும் பின்னே தித்திக்கும்
இனம் இனத்தைச் சேரும்
யா(ஆ)னைக்கும் அடி சறுக்கும்
ஐயர் வரும் வரை அம்மாவாசை காத்திருக்குமா
எலி வலையானாலும் தனிவலை வேண்டும்
நிறைகுடம் தளும்பாது;குறைகுடம் கூத்தாடும்;
வண்டி ஒருநாள் ஓடம் ஏறும், ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்
யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்
தெரியாத சீதேவியை விட தெரிந்த மூதேவியே மேல்.
மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்
கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு
தாயும் சேயுமானாலும், வாயும் வயிறும் வேறுதானே
தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை
பணம் பாதாளம் வரைக்கூட பாயும்
ஆடத் தெரியாதவன் தெரு கோனல் என்றானாம்
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவாம், உள்ள பிரிச்சு பார்த்தா ஈரும், பேனுமாம்
படிப்பது ராமாயாணம். இடிப்பது பெருமாள் கோயில்
வார்த்தை வம்பழைக்கும் வடுமாங்கா சோத்தழைக்கும்
முட்டாள் நண்பனை விட அறிவாளி எதிரியே மேல்
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது
அறக்க மட்டாதவன் இடுப்புல அம்பத்திரெண்டு கருக்கறிவாளாம்
மரத்தில் இருக்கும் பலாக்காயைவிட கையில் இருக்கும் கலாக்காயே மேல்.
வரவர மாமியார் கழுதை போல் ஆனாளாம்
கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆன கதையா
அரசனை நம்பி புருஷனை கைவிட்டது போல் [இங்கு அரசன் என்பது அரச மரத்தை குறிக்கும்]
மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை
ஆத்துல போட்டாலும் அளந்து போடு
என்னதான் பால் ஆறாய் ஒடினாலும் நாய் நக்கிதான் குடிக்கும்
கடத்தேங்காய எடுத்து வழிப்பிள்ளையாருக்கு ஒடச்சானாம்.
புலியப்பாத்து பூன சூடு பொட்டுக்கிச்சாம்
யோக்கியரு வர்றாரு, சொம்ப எடுத்து உள்ள வையி
பேசின வாயும், பூர்வ கந்தலும் நிக்கவே நிக்காது
மொசப்புடிக்கிற நாய மூஞ்சப்பாத்தாலே தெரியும்
ஊரான் வீட்டு நெய்யே; என் பெண்டாட்டி கையே
கெடுவான் கேடு நினைப்பான்
அரசன் அன்று கொல்லும். தெய்வம் நின்று கொல்லும்
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியிலும் குடை பிடிப்பான்
அத்திரிபாச்சா கொழுக்கட்ட இப்பொ வந்து அகப்பட்டன்னானாம்
அடியேங்க பொண்டாட்டியெ காணோம், தலச்சன் புள்ளக்கு பேர் வெச்சானாம்
ராவுத்தரே கொக்கா பறக்காராம், குதிரை கோதுமை ரொட்டி கேக்காம்
கேப்பையில நெய் வடியுது சொன்னா, கேக்கிறவனுக்கு மதி எங்க போச்சு?
பசி வந்தால் பத்தும் பறந்து போகும்
சுண்டைக்காய் காப்பணம். சுமைக்கூலி முக்காப்பணம்
சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்
முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது
புத்திசாலி பொய்க்கு எட்டு நாள்
ஆசை இருக்கு அதிகாரம் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க
துஷ்டனைக் கண்டால் தூர விலகு
அவல நெனச்சு ஒரல இடிச்ச மாதிரி
தண்ணியடிச்சு தண்ணி விலகாது
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது
கேடு வரும் பின்னே, மதி கெட்டு வரும் முன்னே
கடுகு போன இடம் ஆராய்வார்; பூசனிக்காய் போன இடம் தெரியாது
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்
ஊமை இருக்குற ஊர்ல உளறு வாயன் புலவனாம்
எஜமானன் நாய ஏவ; நாய் வால ஏவ; வால் ஈய ஏவிச்சாம்
வெறும் வாய மெல்லரவனுக்கு அவல் கெடைச்சாப்போல
நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும்
இரும்படிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை
ஆடு நனையுதேன்னு ஓநாய் குடை கொண்டுவந்ததாம்.
எள்ளு எண்ணைக்கு காயுது; எலிப்புழுக்கை எதுக்கு காயுது.
எருது நோய் [நோவு] காக்கைக்கு தெரியுமா?
பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே.
ஏழை சொல் அம்பலம் ஏறாது
வினை விதைத்தவன் வினை அறுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான்
அகல உழுவதை விட ஆழ உழுவது மேல்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
ஆடற மாட்டை ஆடி கறக்கணும். பாடற மாட்டை பாடி கறக்கணும்
நண்டு கொழுத்தால் வளையில் தங்காது